தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்! குவிந்துவரும் பாராட்டுகள்!

தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்! குவிந்துவரும் பாராட்டுகள்!


highest  vote in tamilnadu

தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் குறித்து தெரியவந்துள்ளது.திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ப.வேலுச்சாமி தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த மதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

dmk

இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கைத் துவங்கியது. இதுவரை வெளிவந்துள்ள முடிவுகளின் படி பாஜக கூட்டணி 350 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 92, மற்றவை 100 இடங்களில் பெரும்பான்மை பெற்றுள்ளன. தமிழகத்தில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில்  அதிமுக வெற்றி பெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களில் திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ப.வேலுச்சாமிஅதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ப.வேலுச்சாமி 721776 ஓட்டுகளும், பா.ம.காவின் வேட்பாளர் ஜோதி முத்து 201267 ஓட்டுகளும் பெற்று 500000-த்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ப.வேலுச்சாமி வெற்றி பெற்றார்.