10 வருடத்திற்கு முன் காணாமல் போன மகள்..! 10 வருடம் கழித்து பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

10 வருடத்திற்கு முன் காணாமல் போன மகள்..! 10 வருடம் கழித்து பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே உள்ள நரசிங்கபுரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் செல்வமணி. 36 வயதாகும் செல்வமணி, பெரம்பலுார் மாவட்டம், பூலாம்பாடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் செல்வமணியின் வீட்டின் அருகே இருக்கும் தம்பி முறை உறவுகொண்ட ரமேஷ் வயது 30 என்பவருடன் செல்வமணிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலித்துவந்த நிலையில் ஒருநாள் வீட்டை விட்டு இருவரும் ஓடிவிட்டனர்.

பின்னர் உறவினர்கள் இவர்களை தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு கூட்டிவந்தனர், இரண்டாவது முறையும் ஓட்டம் பிடிக்க அப்போதும் உறவினர்கள் தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு கூட்டிவந்துள்ளனனர். இதனை அடுத்து இருவரும் மூன்றாவது முறையாக ஊரை விட்டு ஓட, இதுகுறித்து செல்வமணியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

போலீசார் பல இடங்களில் தேடியும் இருவரையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் இருவரும் காணாமல் போய் 10 வருடங்கள் இருக்கும் நிலையில் தற்போது இரண்டு குழந்தைகளுடன், தனது கணவனையும் அழைத்துக்கொண்டு செல்வமணி அவரது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.

செல்வமணி ஊருக்கு வந்திருக்கும் விஷயம் அறிந்து அவரது உறவினர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் செல்வமணி, தனக்கும், கணவர், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கோரி, ஆத்துார் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo