தமிழகம்

கஜா: "தஞ்சாவூர் அருகே நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; வேரோடு சாய்ந்த தேக்கு மரங்கள்" சோகத்தில் விவசாயிகள்!

Summary:

gaja affect in thanavur

கஜா புயல் நாகப்பட்டிணம் மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் 111 கி.மீ வேகத்தில் தமிழகத்தை தாக்கி, கரையை கடந்து வரும் நிலையில் உள்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை  மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வேதாரண்யத்தில் கரையை கடந்த கஜா புயல் தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களை பெரிதும் பாதித்துள்ளது. விவசாயிகள் பயிரிட்டிருந்த தேக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் நெல் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 


Advertisement