உலகத்திற்கே சோறுபோடும் விவசாயிகள் தினம் இன்று! விவசாயிகள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

உலகத்திற்கே சோறுபோடும் விவசாயிகள் தினம் இன்று! விவசாயிகள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?


formars day


விவசாயக் குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பால் உத்தரப் பிரதேச முதல்வராகி, பின்னர் இந்தியாவுக்கே பிரதமரானவா் தான் சவுத்ரி சரண் சிங். இவர் விவசாயிகளுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவா். உழைப்பவனுக்கும், உழுபவனுக்கும் மட்டுமே நிலம் சொந்தம் என்று மேடைகளில் பேசியவர்.

இவர் விவசாயம் சாா்ந்து பல நூல்களை எழுதியவா். அதனால்தான் அவரின் நினைவிடத்திற்கு ‘கிசான் காட்’ (விவசாயிகளின் நுழைவாயில்) என்று பெயரிடப்பட்டுள்ளது. எனவேதான் அவரின் பிறந்தநாளை நாம் தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடுகிறோம்.

formars day

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயமாகும். நம் நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சமீப காலமாக போதிய மழை இல்லாததால் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக, 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக, சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23-ம் தேதி (இன்று) தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் விவசாயிகளுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.