தமிழகம்

பூங்காவில் தனிமையாக இருந்த காதலர்கள்!. திடீரென 5 வாலிபர்கள் வந்து செய்த கொடூர செயல்!.

Summary:

five youngsters attacke lovers in park


தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி என்பவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் வேலை செய்து வந்துள்ளார். பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி என்ற இளம்பெண்ணும் அதே கடையில் வேலை செய்து வந்துள்ளார். 

குருமூர்த்திக்கும், ராஜலட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதை அறிந்த கடைக்காரர் குருமூர்த்தியை வேலையை விட்டு நீக்கி விட்டார். ஆனாலும் அவர்களின் காதல் நீடித்து வந்தது. 

நேற்று இரவு 8 மணி அளவில் இருவரும் பூங்காவுக்கு சென்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 5 வாலிபர்கள் திடீரென இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி, உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். 

lovers in park க்கான பட முடிவு

உடனடியாக இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ராஜலட்சுமியை தஞ்சை அரசு ராஜாமிராசுதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார்  5 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். ராஜலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்த சிலர் அவர் தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் இந்த தாக்குதலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்துவருகின்றனர்.


Advertisement