AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 15 வயது மாணவி... துணை நடிகர், திமுக நிர்வாகி உட்பட 6 பேர் கைது.!!
சென்னையில் 15 வயது பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ஆந்திராவை சேர்ந்த துணை நடிகர், முன்னாள் திமுக பிரமுகர் உட்பட 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை.
சென்னை கோயம்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் விடுதியில் 15 வயது பள்ளி மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ள்ளனர். அந்த சிறுமியின் தந்தை உயிரோடு இல்லை. அவரது தாயார் வேறு நபரோடு சென்றுவிட்டார். அனாதையாக இருந்த சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கடுத்து மனைவி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து அந்த சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.

மேலும் நெசப்பாக்கத்தை சேர்ந்த பாரதி கண்ணன் (60) மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த பாரதி கண்ணன் சினிமா துணை நடிகருமாவார். இவர் தனது நண்பனான திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகேயுள்ள முன்னாள் திமுக நிர்வாகியான ரமேஷ் என்பவரை சிறுமியிடம் அறிமுகப்படுத்தி பல நாட்களாக பாலியல் சில்மிஷங்களை சிறுமியிடம் செய்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: அட கொடுமையே... +2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.!! கணக்கு டீச்சர் கைது.!!
மேலும் உளுந்தை ரமேஷ், முதல்வர் ஸ்டாலினின் பண்ணை வீட்டையும் பராமரித்து வந்துள்ளார். அவர் சில முறைகேடுகளில் ஈடுபட்டதையறிந்து அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இவர் கடம்பத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த உளுந்தை ரமேஷ் மற்றும் பாரதி கண்ணன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதற்கடுத்து போலீசார் பாரதி கண்ணன், உளுந்தை ரமேஷ் மற்றும் துணை நடிகை நாகம்மாள், கே.கே நகர் பகுதியில் செல்ல அஞ்சலி, பூங்கொடி, நாகராஜ் கார்த்திக், கார்த்திக்கின் மனைவி ஐஸ்வர்யா ஆகிய 6 பேரையும் சிறையிலடைத்தனர். துணை நடிகர், திமுக பிரமுகர் உள்ளிட்டோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "பாப்பா ட்ரெஸ்ஸ கழட்டி அங்கிள் ஏதோ செய்றாரு..." 8 வயது சிறுமி பலாத்காரம்.!! 44 வயது நபர் கைது.!!