"பாப்பா ட்ரெஸ்ஸ கழட்டி அங்கிள் ஏதோ செய்றாரு..." 8 வயது சிறுமி பலாத்காரம்.!! 44 வயது நபர் கைது.!!



man-arrested-under-pocso-for-sexually-assaulting-a-eigh

சேலம் மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக 44 வயது நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழரசன். 44 வயதான இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமி அலறி துடித்திருக்கிறார். அவரது சத்தம் கேட்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் அண்ணன் வந்து பார்த்தபோது தமிழரசன் சிறுமியின் ஆடைகளை கலைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

tamilnadu

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் அண்ணன் இது தொடர்பாக தனது பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பதறியடித்து அந்த பகுதிக்கு ஓடிச் சென்றனர். இதனையறிந்த தமிழரசன் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதன் பிறகு சிறுமியை மீட்ட பெற்றோர் அவரிடம் விசாரித்த போது தமிழரசன் 20 ரூபாய் தருவதாக கூறி தன்னை கட்டிடத்திற்கு அழைத்து வந்ததாக சிறுமி தெரிவித்திருக்கிறார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இதையும் படிங்க: கோபியில் அதிர்ச்சி... 15 வயது சிறுமி கர்ப்பம்.!! 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது.!!

இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "வா கட்டிக்கலாம்..." திருமண ஆசை காட்டி சிறுமி கற்பழிப்பு.!! வாலிபர் மீது போக்சோ வழக்கு.!!