அரசியல் தமிழகம்

பெற்ற தாயை இவ்வளவு கீழ்த்தரமாக பேசலாமா? கண்கலங்கிய எடப்பாடி பழனிச்சாமி.!

Summary:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் நேற்று முன்தினம் தி.மு.க. வேட்பாளர் சிவசங்கரை ஆதரித

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் நேற்று முன்தினம் தி.மு.க. வேட்பாளர் சிவசங்கரை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் பழனிசாமியை அவதூறாக பேசியதாக வெளியான வீடியோ சர்ச்சைய ஏற்படுத்திய நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், திமுக எம்.பியும் துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா பேசியது தொடர்பாக அ.தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சென்னை திருவொற்றியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.குப்பனுக்கு வாக்கு சேகரித்தபோது, தன்னுடைய தாய் குறித்து ஆ.ராசா பேசியது குறித்து கண்கலங்கினார். அதில், என் தாயைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக பேசியிருக்கிறார். முதலமைச்சருக்கே இந்த நிலைமை என்றால், மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள்.

இவர்கள் ஆட்சிக்கு வந்தால், தாய்மார்கள் நிலைமை என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள். எனக்காக பரிந்து பேசவில்லை. ஒவ்வொருவரும் தாய்க்கு பிறந்தவர்கள். தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசுவது, இழிவுபடுத்தி பேசுபவர்களுக்கு தக்க தண்டனைய வழங்க வேண்டும். யார் பெண் குலத்தை இழிவாக பேசினாலும், தாயை இழிவாக பேசினாலும் ஆண்டவன் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை கொடுப்பார் என தெரிவித்தார்.


Advertisement