தமிழகம்

காதல் மனைவியை வேறு ஒருவருக்கு நிச்சயம் செய்த குடும்பத்தினர்.. பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!

Summary:

engineer-complained-to-the-superintendent-of-police

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மூவரசன். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர். அதனையடுத்து நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகமானதை அடுத்து இருவரும் தங்களது ஊருக்கு திரும்பியுள்ளனர். ஆனால் தாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டதை யாருக்கு தெரிவிக்காமல் இருவரும் அவரவர் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்துள்ளனர். 

இந்நிலையில் அந்த இளம்பெண்ணின் பெற்றோர் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் தனது காதலனான மூவரசனுக்கு இ- மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். மேலும் தன்னை அழைத்து செல்லுமாறும் கூறியுள்ளார். 

இச்செய்தியை கேட்டு அதிர்ச்சியான மூவரசன் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதனையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement