தமிழகம்

கேன் குடிநீர் தட்டுப்பாடு! அசுரவேகத்தில் உயர்ந்த குடிநீர் கேன் விலை! வேதனையில் பொதுமக்கள்!

Summary:

drinking water rate increased

கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் போராட்டம் இன்று 5வது நாளாக நீடித்து வரும் நிலையில் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்து கடைகளில் கேன் குடிநீர் ரூ.50 வரை விற்கப்படுகிறது.

தமிழகத்தில் கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் போராட்டம் 5வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, கேன் குடிநீர் விலை 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 1,500 க்கு மேற்பட்ட கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், முறையாக அனுமதி பெற்று இயங்கி வரும் 568 நிறுவனங்களை தவிர அனுமதியில்லாமல், நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வரும் நிறுவனங்களை மூடி சீல் வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில், சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை சீல் வைத்துள்ளனர். இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேன் தற்போது 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Advertisement