தமிழகம்

2 நாளில் கோடி கோடியை கொட்டிய டாஸ்மாக் வசூல்.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

Summary:

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த இரண்டு நாட்களில் 465 கோடியே 79 லட்சத்திற்கு மது விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த இரண்டு நாட்களில் 465 கோடியே 79 லட்சத்திற்கு மது விற்பனையாகியுள்ளது.

பொதுவாக தீபாவளி என்றாலே தமிழகத்தில் மது விற்பனை சூடுபிடித்து வழக்கமான ஒன்று. இந்நிலையில் இந்த ஆண்டும் வழக்கம்போல் தமிழகத்தில் மதுவிற்பனை அமோக வசூலை பெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 465 கோடியே 79 லட்சத்திற்கு மது விற்பனையாகியுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ள தகவலின்படி, அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 103 கோடியே 82 லட்சம் ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 95 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கும், சென்னையில் 94 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கும் மது பாட்டில்கள்  விற்பனையாகியுள்ளன.

அதேபோல் சேலம் மண்டலத்தில் 87 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 84 கோடியே 56 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement