தமிழகம்

முதல்வர் வீட்டின் அருகே இவ்வளவு குப்பை, மற்ற இடங்கள் எப்படி சுத்தமாக இருக்கும்? உயர்நீதிமன்றம்!

Summary:

court talk about Garbage


தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மேலும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நேரத்தில் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் அது பொது மக்களை பாதிக்கச் செய்யும் எனவே மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காகவும் கூடுதல் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், கடவுளுக்கு அடுத்தபடியாக கருதப்படும் மருத்துவர்கள், ஏழை மக்களுக்கு சிகிச்சை வழங்க முடியாது என எப்படி மறுக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

மேலும், குப்பைகள் அகற்றப்படாத காரணத்தால் தான் டெங்கு காய்ச்சல் பரவுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், முதல்வர் வீட்டுக்கு அருகில் மலைபோல குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும், முதல்வர் வீட்டு அருகிலேயே இந்த நிலை என்றால், மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என கற்பனை செய்ய முடியும் எனத் தெரிவித்தனர். மேலும் டெங்கு காய்ச்சலை தடுக்க எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.


Advertisement