அம்மாடியோவ்... ஒரு நொடிக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கிய பிரபல தமிழ் நடிகை! யார் தெரியுமா?
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா.! மொத்த எண்ணிக்கை 1885 ஆக உயர்வு.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் இதுவரை 2,938,733 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 203,798 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை கொரோனா சற்று கட்டுக்குள் இருந்தாலும், பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 26,917 பாதிக்கப்பட்டுள்ளனர், 826 பேர் உயிர் இழந்துள்ளனர்
தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்துவந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 64 பேருக்கு உறுதி செய்யப்பட்டு பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1885 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.