தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா உறுதி.! பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு.!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கிவருகிறது. அதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் நேற்றுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 67 ஆக இருந்த நிலையியல், இன்று 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 17 பேருக்கும், இன்று ஒரே நாளில் 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.