தமிழகம்

10 ஆயிரத்தை நெருங்கும் சென்னை..! சென்னையில் இன்று மட்டும் ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா உறுதி.!

Summary:

Corono chennai count latest update

சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் உலகளவில் பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும், குறிப்பாக தமிக்காலத்திலும் கொரோனாவின் தாக்கம், பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு பலமடங்கு அதிகரித்துவருகிறது.

தமிழகத்தில் இன்றும் மொத்தம் 759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளநிலையில் சென்னையில் மட்டும் 624 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 15,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை இதுவரை 9,989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 103 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


Advertisement