சென்னையில் கோரதாண்டவாடும் கொரோனா! மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரங்கள் இதோ!corono-affected-details-in-chennai

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இவற்றில் சென்னையிலேயே பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கைகள் நாளுக்குநாள் அதிகமாகி கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனோவை கட்டுபடுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையில் மட்டும் தற்போது கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12, 203 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் கொரோனா  பாதிப்பில் இராயபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. ராயபுரம் உட்பட 6மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ளது. 

 

 

chennaiஇந்நிலையில் சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, ராயபுரத்தில் 2252 கோடம்பாக்கத்தில் 1559, திரு.வி.க நகரில் 1325, தேனாம்பேட்டையில் 1317, தண்டையார்ப்பேட்டையில் 1262, அண்ணா நகரில் 1046 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் வளசரவாக்கத்தில் 777 பேர், அடையாறு 672, அம்பத்தூரில் 504, திருவொற்றியூரில் 369, மாதவரத்தில் 274, பெருங்குடியில் 212, சோழிங்கநல்லூரில் 208, மணலி 168, ஆலந்தூரில் 165பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.