தமிழகம்

கொத்து கொத்தாக அள்ளும் கொரோனா வைரஸ்..! தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்தது..!

Summary:

Corona total cases count in Tamil Nadu

தமிழகத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. 

சீனாவின் உஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அன்றாடம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை தமிழகத்தில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 242 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதில் தற்போது வரை 6948 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை இம்புட்டு ...

பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு புறம் அதிகரித்தாலும் அதேநேரம் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைப்பவர்க்ளின் எண்ணிக்கையும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது தமிழகத்தில் தற்போது வரை 3 லட்சத்து 43 ஆயிரத்து 930 பேர் கொரோனா நோய் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


Advertisement