தமிழகம் Covid-19

2021: ஆண்டின் முதல் நாளே தமிழகத்தில் பதிவான கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

Summary:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 921 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,18,935 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இன்று மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,135 ஆக உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் 1,029 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,98,420 ஆக உயர்ந்துள்ளது எனவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement--!>