காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு இத்தனை பேர் பாதிப்பா..? மொத்த பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒருநாளில் 1,107-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,659 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.