நாளை தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு..! மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கவும்..!



Corona full lock in TN

ஜூலை மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்ததை அடுத்து நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை உட்பட மற்ற மாவட்டங்களிலும்  கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. நேற்றுவரை தமிழகத்தில் 1,60,907 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,315 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையியல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

corona

இந்நிலையில் ஜூலை 31 வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு முறை நடைமுறையில் உள்ள நிலையில், இம்மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த முழு ஊரடங்கு நாட்களில் காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள், இறைச்சி கடைகள், மதுக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள், மருத்துவ அவசரத் தேவைகள் போன்றவற்றிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.