தமிழகம்

சென்னையில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..! இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்.!

Summary:

Corona cases again high in Chennai for last two days

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் புதிதாக  5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் இன்று 1,179 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 3,32,105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,14,260-ஆக உள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் குறைவாகா பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சென்னையில் நேற்று புதிதாக 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டது, அதேபோல் சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து  ஒரே நாளில் 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சற்று ஆறுதலாக சென்னையில் இன்று மட்டும் 1046 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

சேனனியில் இதுவரை 1,15,444 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாகவும் இன்றைய தேதியில் 11,321 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement