கொரோனோ வைரஸ் பாதிப்பை பயன்படுத்தி, இந்த பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் தண்டனை!

கொரோனோ வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் உலக அளவில் கொரோனோ வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,500 ஐ தாண்டியுள்ளது.
இந்தநிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மக்கள் பயணம் செய்யும் பொழுது விமான நிலையங்கள், ரயில் நிலையக்கள், மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், அதிகப்படியான மக்கள் கூடும் இடங்களில் நோய் தாக்கத்தினை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை, பொதுமக்களின் நலனுக்காக அலைபேசி வாயிலாக விளம்பரம் செய்து அடிக்கடி கைகளை சோப், சானிடைசர் போன்றவற்றைக் கொண்டு சுத்தம் செய்ய அறிவுறுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து இப்பொருட்கள் பொதுமக்களுக்கு அதிக அளவில் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு சில விற்பனையாளர்கள் இப்பொருட்களை அதிக விலைக்கு விற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விதிகளை மீறுபவர்கள் மீது TNLMCTS என்ற மொபை ஆப் மூலமாகவோ 04424321438 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தொழிலாளர் நலத்துறை சார்பாக கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.