தமிழகம் மருத்துவம் Covid-19

சென்னையில் கொரோனா தொற்று! 8 பகுதிகளுக்கு சீல் வைப்பு! உச்சகட்ட கண்காணிப்பு!

Summary:

corona action

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த கொடூர வைரஸை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைவாக இந்தநிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர்களால் சற்று அதிகரிக்க தொடங்கியது. அந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், தொற்றுநோய் கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறது. டெல்லியில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்ற சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் வசித்து வந்த வீடு மற்றும் அருகில், சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து வீடுகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இந்தநிலையில், சென்னையில் புளியந்தோப்பு, எண்ணூர், தண்டையார்பேட்டை, முத்தியால்பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, புரசைவாக்கம் மற்றும் புதுப்பேட்டை ஆகிய 8 பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா மேலும் பரவக்கூடாது என்பதற்காக இந்த 8 பகுதிகளும் நேற்று மூடப்பட்டன. வெளியே இருந்து யாரும் இந்த 8 பகுதிகளுக்குள் நுழைய முடியாது. அதே போல உள்ளே இருந்தும் யாரும் வெளியே செல்ல முடியாது.


Advertisement