கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??
#Breaking: காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி, முன்னாள் எம்.எல்.ஏ தெய்வநாயகம் இயற்கை எய்தினார்: முக்கிய பிரமுகர்கள் இரங்கல்.!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், கட்சியில் பல பொறுப்புகளில் பணியாற்றிய முன்னாள் எம்.எல்.ஏ தெய்வநாயகம் (வயது 87).
இவர் கடந்த 3 முறை மதுரை மத்திய தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய பொறுப்புகளிலும் பணியாற்றி இருந்தார்.
மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் - அண்ணன் #தெய்வநாயகம் அவர்கள் வயது முதிர்வினால் இயற்கை எய்திய செய்தி வருத்தமளிக்கிறது. pic.twitter.com/Z44ITcWwm7
— Viswanathan Perumal (@Viswanathan_INC) December 2, 2023
காங்கிரசில் ஏற்பட்ட பிளவின்போது, மூப்பனார் உருவாக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மூப்பனாருடன் இணைந்து பணியாற்றிய தெய்வநாயகம், இறுதியில் காங்கிரசில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட தெய்வநாயகம் இயற்கை எய்தினார். அவரின் மறைவுக்கு அரசியல்கட்சி பிரமுகர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.