ஆளும் திமுக அரசை கண்டித்து... அதிமுக சார்பில் கோவையில் இன்று உண்ணாவிரத போராட்டம்...!

ஆளும் திமுக அரசை கண்டித்து... அதிமுக சார்பில் கோவையில் இன்று உண்ணாவிரத போராட்டம்...!


condemning-the-ruling-dmk-government-fasting-protest-on

கோவையில் இன்று தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில்  உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. 

கோவை சிவானந்தா காலனியில் இன்று (2.11.22) தி.மு.க அரசை கண்டித்து, கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். 

இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்குகிறது. இதில் முன்னாள் முதலமைச்சரும் தமிழக எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைக்து உரையாடுகிறார். 

மேலும், மாநகர மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

தமிழகத்தை  ஆட்சி செய்து வரும் தி.மு.க அரசு கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்றும், கோவையில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும், மேலும் தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களின் அத்தியாவசிய தேவையான பால் விலை மற்றும் சொத்து வரி, போன்றவை உயர்த்தப்பட்டதை கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.