கலெக்டரின் அதிரடி உத்தரவு... சென்னையில் வருகின்ற 5 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்!!

கலெக்டரின் அதிரடி உத்தரவு... சென்னையில் வருகின்ற 5 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்!!


Coming 5 th feb all tasmac bars closed in Chennai

சென்னையில் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு வருகின்ற 5 ஆம் தேதி அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற அதிரடி உத்தரவை சென்னை மாநகர கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இவ்வாறு அறிவித்துள்ளார்.

அதாவது வடலூர் ராமலிங்கர் நினைவு தினம் வருகின்ற 5 ஆம் தேதி அனுசரிக்கபட உள்ளதை முன்னிட்டு  தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும், அனைத்துவிதமான பார்களும் வருகின்ற 5 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மூட வேண்டும் என்ற அதிரடி உத்தரவை சென்னை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

chennai

எனவே அன்றையதினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறி யாரேனும் மதுபானங்களை விற்றால் விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.