அப்பா கஷ்டப்படுகிறார்! ஆனால் நான்? தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவியின் உருக்கமான கடிதம்!



college-student-commit-suicide-for-not-written-exam-wel

திருவொற்றியூர் ரெயில் நிலையம் சாலை பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். சென்னை மாநகராட்சி 5-வது மண்டலத்தில் சென்னை குடிநீர் வாரியத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா(18) என்ற ஒரு மகள் உள்ளார்.

கீர்த்தனா மணலி சேலைவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கல்லூரியில் பருவ தேர்வு நடைபெற்றுவரும்நிலையில் தேர்வு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கீர்த்தனா தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

நீண்ட நேரமாகியும் கீர்த்தனா வெளியே வராததால், சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்ட, கீர்த்தனா கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கீர்த்தனா தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டிருப்பதை பார்த்து கதறி அழுதனர்.

suicide

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கீர்த்தனாவின் உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கீர்த்தனா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், எனது பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு என்னை படிக்க வைக்கின்றனர். ஆனால் நான் கல்லூரியில் நடைபெற்ற பருவத்தேர்வை சரியாக எழுதவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கீர்த்தனா எழுதியிருந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.