தமிழகம்

ராம்ப் வாக் பயிற்சியின்போது கல்லூரி மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!! வெளியான நெஞ்சை உறையவைக்கும் அதிர்ச்சிதகவல்!!

Summary:

College girl dead in ramp walk practise

பெங்களூரு பீன்யா பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் ஷாலினி என்ற 29 வயது நிறைந்த பெண் எம்பிஏ முதலாமாண்டு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான பிரஷர்ஸ் நிகழ்ச்சி நடைபெற தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்துள்ளது. மேலும் அதற்காக மாணவர்கள் பலரும் தயாராகி வந்துள்ளனர். 

இந்நிலையில் ஷாலினி தனது நண்பர்கள் சிலருடன் ராம்ப் வாக்  பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது பயிற்சியின் போதே ஷாலினி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஷாலினி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து காவல்துறை ஆணையர் கூறுகையில், ராம்ப் வாக் பயிற்சியின்போது ஷாலினி மயங்கி விழுந்து அங்கேயே இறந்துள்ளார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளனர்.இது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement