ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
கோவை: வீட்டில் தீ விபத்து.. தாய், 2 மகள், நாய் மூச்சுத்திணறி பலியான சோகம்.. பரிதாபம்.!
வீட்டினுள் தீ விபத்து ஏற்பட்டு தாய், 2 மகள்கள் மற்றும் நாய் மூச்சுத்திணறி பலியான சோகம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர், உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டனில் வசித்து வருபவர் விஜயலட்சுமி. இவரின் கணவர் ஜோதிலிங்கம். இவர் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்துவிட்டார். இந்த தம்பதிக்கு அர்ச்சனா (வயது 25), அஞ்சலி (வயது 22) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஒருவர் ஐ.டி கம்பெனியில் பணியாற்றி வரும் நிலையில், மற்றொருவர் பைனான்ஸ் தொழில் செய்கிறார்.
இந்நிலையில், இவர்களின் வீட்டில் இருந்து நேற்று கரும்புகை வெளியேறியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், கதவை உடைத்து தீயை அணைக்கும் முயற்சியின்போது, சமையல் அறையில் ஒரு பெண்ணும், படுக்கை அறையில் அம்மாவும், மற்றொரு பெண்ணும் என இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
பின்னர், இந்த விஷயம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 3 பெண்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். வீட்டில் இருந்த நாயும் உயிரிழந்துள்ளதால், தீ விபத்து ஏற்பட்டு மூச்சுத்திணறி அனைவரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.