சென்னை கனமழைக்கு காரணம் மேகவெடிப்பா?? - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்..!

சென்னை கனமழைக்கு காரணம் மேகவெடிப்பா?? - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்..!


chennai-heavy-rain-issue-cloud-blast-is-the-reason-anno

தலைநகர் சென்னையில் நேற்று காலை 10 மணிக்கு மேல் தொடங்கிய திடீர் கனமழை, நேற்று இரவு வரை பெய்தது. திடீரென பெய்த அதிகனமழை காரணமாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காரணத்தால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர். 10 மணிநேரம் பெய்த மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டது.

chennai

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், "சென்னையில் நேற்று பெய்த பலத்த மழைக்கு மேகவெடிப்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே கனமழை பெய்தது. மேகவெடிப்பில் மழை பெய்தால் குறிப்பிட்ட நேர இடைவெளியில் மட்டுமே பெய்யும். தற்போதைய மழை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மட்டுமே. 2 நாட்களுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும். அதிக கனமழையை கணிப்பதில் சிக்கல் இருந்ததால், நேற்று அதனை முன்கூட்டியே கணிக்க இயலவில்லை" என்று தெரிவித்தார்.