ரஜினி கூறும் இளம் முதல்வர் வேட்பாளருடன் முடிந்தால் மோதிப்பாருங்கள்! ஸ்டாலினுக்கு ஓப்பன் சேலஞ்ச்!

ரஜினி கூறும் இளம் முதல்வர் வேட்பாளருடன் முடிந்தால் மோதிப்பாருங்கள்! ஸ்டாலினுக்கு ஓப்பன் சேலஞ்ச்!



challenge-to-cm-candidate

ரஜினிகாந்த் விரும்பும் இளைஞர் கூட்டத்துடன் முடிந்தால் தற்போது முதலமைச்சர் கனவில் இருப்பவர்கள் மோதி பார்க்கட்டும் என்றும் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கூறியுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் வரும் தேர்தலில் கட்சி ஆரம்பித்து போட்டியிடப் போகிறோம் என்றும், ஆனால் தான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றும் இளைஞர் ஒருவர்தான் முதலமைச்சர் என்றும் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அது அரசியல் வட்டாரங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

MK Stalin

இந்த நிலையில் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், அவர்கள் ரஜினி ரசிகர்களிடையே பேசுகையில், ’முதலமைச்சர் வேட்பாளராக பலரும் வரிசை கட்டி உள்ளனர். மு.கஸ்டாலின், உதயநிதி, ஈபிஎஸ், ஓபிஎஸ், சீமான், கமல்ஹாசன், அன்புமணி ராமதாஸ், விஜயகாந்த் ஆகிய பலர் முதலமைச்சர் கனவில் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் ரஜினி நிறுத்தும் இளைஞரை எதிர்த்து நிற்க தயாரா.? என சவால் விடுத்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் விரும்பும் இளைஞர் கூட்டத்துடன் முடிந்தால் இவர்கள் மோதி பார்க்கட்டும் என்றும் கூறியுள்ளார்.