AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
Video: பெத்த மகளை வைத்து இப்படி பண்ணலாமா! தனது 7 வயது மகளின் உயிரை பணயம் வைத்து தந்தை செய்த காரியத்தை பாருங்க! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ....
ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் பகுதியில் பரேதா அணையின் அருகே ஒரு தம்பதியினர் தங்களது ஏழு வயது மகளை ஆபத்தான முறையில் அணையின் ஓரத்தில் அமர வைத்துள்ளனர். இந்த நிலையில் சிறுமிக்கு போஸ் கொடுக்க சொல்லி, வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் பெயர் வாங்கும் நோக்கில் எடுத்த இந்த செயல் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பாதுகாப்பு தடுப்புகளை மீறிய செயல்
இந்த வீடியோவில், பரேதா அணையின் பாதுகாப்புத் தடுப்புகளுக்கு அப்பால் சிறுமி மிகவும் அபாயகரமான இடத்தில் அமர்ந்திருப்பது தெளிவாக காணப்படுகிறது. வீடியோவில் அவரது தாயும் தெரிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், குழந்தையின் பாதுகாப்பு குறித்து பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பல்வேறு தளங்களில் இருந்து பார்வையாளர்கள், குழந்தையின் பாதுகாப்பை புறக்கணித்து செய்யப்பட்ட இந்த ரீல் வீடியோ குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ये रील का चक्कर है बाबू भईया!
राजस्थान के भरतपुर में माता-पिता रील के चक्कर में बेटी की जान को खतरे में डाला।#Rajasthan #BarethaDam #Bharatpur pic.twitter.com/8jTwTrVfT5— Surabhi🇮🇳 (@surabhi_tiwari_) July 7, 2025