தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்கள் எத்தனை பேர் கைது.? வெளியான அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்கள் எத்தனை பேர் கைது.? வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 2.18 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி வருகிறது. கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. கொரானோ தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 23ம் தேதி முதல் ஏப்ரல்14–ந் தேதி வரை 21 நாட்கள் முதல் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் மே 3–ந் தேதி வரை இரண்டாவது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனாவசியமாக வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 18 ஆயிரத்து 533 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2 லட்சத்து 5 ஆயிரத்து 54 லட்சம் வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன.