லாரியை முந்திய தனியார் பேருந்து.! சாலையோரமாக இருந்த மின்சார கம்பி உரசியதில் ஏற்பட்ட விபத்து.! 5 பேர் பரிதாப பலி.!

லாரியை முந்திய தனியார் பேருந்து.! சாலையோரமாக இருந்த மின்சார கம்பி உரசியதில் ஏற்பட்ட விபத்து.! 5 பேர் பரிதாப பலி.!



bus accident in thanjavur

தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து மன்னார்குடிக்கு சென்ற பேருந்து வரகூர் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த லாரிக்கு வழிவிடுவதற்க்காக பேருந்து ஓரமாக சென்றுள்ளது. அப்போது பள்ளத்தில் ஒருபுறமாக பேருந்து சரிந்துள்ளது. அப்போது அந்த பேருந்தில் படியில் பயணம் செய்தவர், வெளியே தாழ்வாக சென்று கொண்டு இருந்த மின்சார கம்பியை பயத்தில் பிடித்துள்ளார். 

அந்த நபர் மின்சார கம்பியை பிடித்தவுடனே ஆவின் அருகில் இருந்த  5 பேர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்திற்கு டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், " தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே தனியார் பேருந்து மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் மரணமடைந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் விரைந்து நலம்பெற பிரார்த்திக்கிறேன். இவ்விபத்தில் பலியானோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.