தமிழகம்

இனிமேல் பி.இ. படித்தவர்களும் அரசு பள்ளிகளில் கணித ஆசிரியராகலாம்! மகிழ்ச்சியில் பொறியியல் பட்டதாரிகள்!

Summary:

BE eligible for ted exam

பி.இ, பி.எட் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தேர்வை எழுதி, பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்ப வரை கணித ஆசிரியராகலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இதற்கு முன்பு பி.இ படித்தவர்கள் பி.எட். (B.Ed) படிப்பதற்கு மட்டுமே அனுமதி இருந்தது. ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வு எழுத தகுதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதால், பி.இ படித்து பி.எட் முடித்தவர்கள் ஆசிரியராக முடியாத சூழல் இருந்தது.

இதனால் பி.எட் படிக்க அனுமதி இருந்தும் பொறியியல் மாணவர்கள் பி.எட் படிப்பில் சேராமல் இருந்தனர். தற்போது பி.இ.,பி.எட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராகலாம் என சமநிலைக் குழு அரசாணை வெளியிட்டுள்ளதால், டெட் தேர்வெழுத தகுதி பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement