பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது மட்டும் தான் இருக்கிறது.! கடுமையாக விமர்சித்த பிரபல நடிகை.!
சென்னையை தவிர தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி! தமிழக அரசு உத்தரவு!
சென்னையை தவிர தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி! தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் ஆட்டோக்கள் சென்னையை தவிர பிற பகுதிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி இல்லை.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல கட்டங்களாக நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை முதல் தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் ஆட்டோக்கள் இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோவில் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை தவிர மாநிலத்தின் பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி. கொரோனா நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி கிடையாது.
பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிட்டைசர்களை ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர்களும், பயணியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை தினமும் மூன்று முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
ஓட்டுநர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவியும், வாகனத்தில் சுகாதாரத்தையும் பேண வேண்டும் என உள்ளிட்ட கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன.