எழுந்து நின்று காட்சியளிக்கும் அத்தி வரதர்! பக்தி பரவசத்தில் குவிந்துவரும் பக்தர்கள்!

எழுந்து நின்று காட்சியளிக்கும் அத்தி வரதர்! பக்தி பரவசத்தில் குவிந்துவரும் பக்தர்கள்!



athivarathar temple Dharisanam

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்தி மரத்தாலான பெருமாளைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். 

வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நேற்றுவரை சயன கோலத்தில் அத்திவரதர் தரிசனம் நடைபெற்றது. கடந்த 31 நாட்களில் சுமார் 45 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை சயன கோலத்தில் தரிசனம் செய்த நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் தரிசனம் நிறுத்தப்பட்டு அத்திவரதரை நின்ற கோலத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றன. 

athi varathar

இந்நிலையில் இன்று அதிகாலை 5.25 மணிக்கு நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம் தொடங்கியது. அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் அனந்த சயன கோலத்தில்(படுத்த நிலையில்) பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 31 நாட்களில் ஏறத்தாழ 48 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டுள்ளனர். 

இன்று முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் அத்திவரதர்  காட்சியளிக்க உள்ளார். இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அமைதியாக வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இன்றுமுதல் சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.