அரசியல் தமிழகம்

அதிமுகவில் சசிகலாவை இணைக்க பாஜக முயற்சியா.? ஓப்பனாக பேசிய அண்ணாமலை.!

Summary:

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் பா.ஜ.க நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க மாநிலத் துணைதலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி பாஜக தேர்தல் களத்தை சந்திக்கும் என தெரிவித்தார்.

மேலும், சசிகலாவிடம் கூட்டணி குறித்து தனியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றார். தேசிய ஜனநாயகக் கட்சியின் மிகப் பெரிய கட்சி அதிமுக. தமிழகத்தில் பாஜக வலுவான நிலையில் உள்ளது.  சர்வதேச அளவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை கொண்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்தப்படும். 

பெண்கள் பாஜகவின் பக்கம் சாய்ந்து உள்ளனர். சசிகலாவை அதிமுகவில் இணைக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. சசிகலா அதிமுகவில் சேருவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று பா.ஜ.க மாநிலத் துணைதலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
 


Advertisement