தமிழகம்

தாயருகே மகள் உயிர் பிரிந்த சோகம் - திருமண ஆகிய ஒன்றரை வருடத்தில் அப்படி என்னதான் நடந்தது!

Summary:

anitha suside in thirupoor

திருப்பூர் மாராப்பகவுண்டர் கார்டன் பகுதியை சேர்ந்தவர்கள் ஈஸ்வரமூர்த்தி- சரஸ்வதி தம்பதியினர்.இவர்களுக்கு அனிதா மற்றும் அசோக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மகள் அனிதா நீட் தேர்வு மாண, மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் அனிதாவுக்கு கணேசன் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர்கள்.திருமணம் ஆகி ஒன்றரை வருடத்திற்குள் அனிதாவுக்கு அவரது கணவர் குடும்பத்திற்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனிதா தன் கணவருடன் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

தொடர்புடைய படம்

ஆனால் சிறிது நாட்களுக்கு பிறகு அனிதாவின் கணவரும் சண்டை போட்டுகொண்டு தன் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அனிதா நேற்று முன் தினம் மாலையில் தன் வீட்டின் அறையில் தூக்கு மாட்டி இறந்துள்ளார்.

இதில் என்ன கொடுமை என்றால் அனிதாவை காண அவரது தாயார் வந்துள்ளார். அப்போது கதவு உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததை கண்டு அனிதா உள்ளே படித்துகொண்டு இருக்கிறார் என நினைத்து தொந்தரவு செய்யாமல் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில்தான் அனிதாவின் உயிர் பிரிந்துள்ளது.


Advertisement