பாமக தொண்டருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அன்புமணி ராமதாஸ்.! நெகிழ்ச்சியில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்.!

பாமக தொண்டருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அன்புமணி ராமதாஸ்.! நெகிழ்ச்சியில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்.!


anbumanai-ramadas-suddenly-visit-thondar-function

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தொண்டர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சிக்கு திடீரென வருகை தந்தது ஊர் பொதுமக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் காடுவெட்டியில் உள்ள மாவீரன் காடுவெட்டி குரு அவர்களின் மண்டபத்திற்கு சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் சேத்தியாதோப்பு அருகே தீப்பாய்ந்த நாச்சியார் கோயில் எதிர்புறம் உள்ள மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவிற்காக அங்கு பெரிய அளவில் கட்சி பேனர் வைக்கப்பட்டிருந்தது.

pmk

அந்தக் கட்சி பேனரை பார்த்ததும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் திடீரென காரை நிறுத்தி மண்டபத்திற்குள் சென்று இளம்பெண் பால அம்பிகாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அவர்களின் திடீர் வருகையையொட்டி குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பாமக தொண்டர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.