சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலை சேதம்.. போராட்டம் எதிரொலி.. போலீசார் குவிப்பு!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தங்குடி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தியதாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு காரணமானவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் 2 இளைஞர்களை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களின் உறவினர்கள், அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள்..! காலையில் சடலமாக கிடந்த மூதாட்டி.... பகீர் சம்பவம்!!!
இதனிடையே, அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சிதம்பரம் டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஓடஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை.. 20 பேர் கும்பல் பரபரப்பு செயல்.. கடலூரில் பயங்கரம்.!