நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள்..! காலையில் சடலமாக கிடந்த மூதாட்டி.... பகீர் சம்பவம்!!!



old-woman-killed-robbery-in-cuddalore

கடலூர் அருகே திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவர், நகைக்காக கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வசித்து வந்த கலா என்ற மூதாட்டி, வழக்கம்போல் நேற்று இரவு தனது வீட்டின் வெளியே படுத்துத் தூங்கியுள்ளார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்களில் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் அவரது காது மற்றும் மூக்கு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதுடன், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: ஓடஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை.. 20 பேர் கும்பல் பரபரப்பு செயல்.. கடலூரில் பயங்கரம்.! 

Cuddalore

இதையடுத்து, மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். காலையில் மூதாட்டி உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை மற்றும் நகைக் கொள்ளை வழக்காக பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர். நகைக்காக மூதாட்டியை தாக்கி கொலை செய்த இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காரித்துப்பிய நபர்.. ஆத்திரத்தில் வீசிய குண்டு.. கடலூரில் ஓட்டுநர் கொலை.. பதறவைக்கும் தகவல்.!