காரித்துப்பிய நபர்.. ஆத்திரத்தில் வீசிய குண்டு.. கடலூரில் ஓட்டுநர் கொலை.. பதறவைக்கும் தகவல்.! 



Cuddalore Driver Murder: Country-Made Bomb Attack Turns Deadly Amid Business Rivalry

நாட்டு வெடிகுண்டு வீசி ஓட்டுநர் கொல்லப்பட்ட கொடூரம் கடலூரில் நடந்துள்ளது. 

நண்பர்கள்: 

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிச்சாவடி, பெரியகாட்டுபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சசிகுமார் (வயது 31). இவர் கார் ஓட்டுநர் ஆவார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக புதுச்சேரி மாநிலம் வில்லியனூர், உறுவையாறு பகுதியில் வசித்து வந்துள்ளார். அவ்வப்போது சொந்த ஊருக்குச் செல்லும் சசிகுமார், உறவினரின் வீட்டில் தங்கி இருப்பது வழக்கம். அப்போது, சசிகுமார் - அதே பகுதியைச் சேர்ந்த ராஜா இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நெருங்கிய நண்பர்களும் ஆகி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: பணம் சம்பாதிக்க ஆசையா உஷார்? உங்க வங்கிக்கணக்கை வாடகைக்கு விடுறீங்களா? தமிழ்நாடு முழுவதும் 837 பேர் கைது.! 

நாட்டு வெடிகுண்டு: 

இதனிடையே, நேற்று காலை நேரத்தில் வழக்கம்போல சசிகுமார் ராஜாவின் வீட்டுக்கு வந்த நிலையில், காரை சுத்தம் செய்துகொண்டு இருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், இவர்களின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி இருக்கிறது. இந்த குண்டு ராஜாவின் வீட்டு சுவர் மீது பட்டு வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு இருவரும் உயிர்பிழைக்க ஓட, கும்பல் இருவரையும் துரத்திச் சென்று மீண்டும் குண்டு வீசி இருக்கிறது. 

Crime news

திரைப்பட பாணியில்.. 

இந்த சம்பவத்தில் ஒரு குண்டு சசிகுமாரின் கையில் பட்டு வெடித்த நிலையில், அவர் 50 மீட்டர் தூரம் ஓடி தடுமாறி விழுந்தார். அவரை சுற்றிவளைத்த கும்பல் தலை, கழுத்து உட்பட உடலில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இந்த சம்பவத்தில் சசிகுமார் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜா தப்பியோடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த புதுச்சேரி மாநிலம் தளவக்குப்பம் காவல்துறையினரிடம் சம்பவத்தை விவரித்துள்ளார். 

விசாரணை: 

பின் இதுகுறித்து கடலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேரில் வந்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்த கேமிராவை ஆய்வு செய்து, ஏழுமலை, ராஜா (வயது 46) ஆகியோரின் அடையாளத்தை உறுதி செய்தனர். இவர்கள் இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு தொழில் போட்டி காரணமாக பிரிந்து இருக்கின்றனர். இந்த பிரிவுக்கு சசிகுமார் காரணம் என ஏழுமலை கூறிய நிலையில், 2 வாரங்களுக்கு முன்பு ராஜா, சசிகுமார் வந்தபோது, ஏழுமலையான் மகன் பெருமாள் முறைத்து பார்த்து காரித்துப்பி இருக்கிறார். 

Crime news

வாக்குவாதம் கொலையில் முடிந்தது.. 

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் ஏழுமலையின் மனைவியிடம் சென்று, உன் மகனை கவனமாக வைத்துக்கொள் என மிரட்டி வந்துள்ளனர். இதனால் ஏழுமலை, அவரின் மகன் பெருமாள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு ராஜா, சசிகுமாரை கொலை செய்ய காத்திருந்துள்ளனர். சம்பவத்தன்று இவர்களின் திட்டப்படி கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டதில் சசிகுமார் கொல்லப்பட்டார். இதனையடுத்து, குற்றவாளிகளுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். 

 
 

 

 

இதையும் படிங்க: கணவனை போட்டுத்தள்ளி கபடநாடகம்.. கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி பகீர் செயல்.. பரபரப்பு தகவல்.!