பணம் சம்பாதிக்க ஆசையா உஷார்? உங்க வங்கிக்கணக்கை வாடகைக்கு விடுறீங்களா? தமிழ்நாடு முழுவதும் 837 பேர் கைது.! 



Tamil Nadu Cybercrime Crackdown: 837 Arrested for Renting Out Bank Accounts to Fraudsters

மோசடி செயலுக்கு வங்கிக்கணக்கை கமிஷன் அடிப்படையில் வாடகைக்கு விட்டதாக கல்லூரி மாணவர்கள் உட்பட 837 பேர் கைது செய்யப்பட்டனர். 

சலுகை மோசடி: 

தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் ஆன்லைன் சம்பாத்தியம், சலுகை என பல்வேறு பெயர்களில் குற்றவாளிகள் பணம்பறிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக பதிவான வழக்குகளின் அடிப்படையில் 9804 பேரிடம் ரூ. 545 கோடி பணம் மோசடி செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கணவனை போட்டுத்தள்ளி கபடநாடகம்.. கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி பகீர் செயல்.. பரபரப்பு தகவல்.! 

கடத்தல் எப்படி? 

சைபர் குற்றவாளிகள் மோசடி பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப, தமிழ்நாட்டில் இடைதரர்களை வைத்து செயல்பட்டது தெரியவந்தது. இவர்களுக்கு உதவியாக மக்களிடம் என்ன வேலை என்றே கூறாமல், வங்கிக்கணக்கை மோசடி செயலுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. 

Crime news

உத்தரவு: 

இதுதொடர்பாக மாநில சைபர் கிரைம் அதிகாரிகளுக்கு கிடைத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படவே, கடந்த 6, 7 ம் தேதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலரிடமும் கமிஷன் அடிப்படையில் வங்கிக்கணக்கை வாங்கி பயன்படுத்திக்கொண்டது உறுதிசெய்யப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு கல்லூரி மாணவர்கள் உட்பட 837 பேர் கைது செய்யப்பட்டனர். 

வழக்குப்பதிவு: 

சைபர் குற்றவாளிகளுக்கு வங்கிக்கணக்கை வாடகைக்கு விட்டதாக 157 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. 204 ஸ்மார்ட்போன்கள், 185 சிம்கள், 4 லேப்டாப், ரூ.1 லட்சம் ரொக்கம், 114 வங்கி பாஸ்புக், 73 டெபிட் கார்டு, 1 கிரெடிட் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. பிற விபரங்கள் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு வருகிறது. 

Crime news

வங்கிக்கணக்கை பயன்படுத்தி பணத்தை மாற்றிவிட்டு வீட்டில் இருந்து சம்பாதிக்கலாம், கமிஷன் பெறலாம் என்ற எண்ணத்தில் யாரேனும் அணுகினால் கவனமாக இருக்குமாறும், சைபர் குற்றத்துக்கு உடந்தையாக இருக்க வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: பெண் பூ வியாபாரிக்கு நேர்ந்த சோகம்.. குடும்ப பிரச்சனையில் மகன் செய்த பயங்கரம்.!