பெண் பூ வியாபாரிக்கு நேர்ந்த சோகம்.. குடும்ப பிரச்சனையில் மகன் செய்த பயங்கரம்.!
குடும்ப பிரச்சனையில் பெண் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
தம்பதி:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, கருப்பனூர், எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் அண்ணாதுரை. இவரின் மனைவி கஸ்தூரி (வயது 53). பூ வியாபாரியாக வேலை பார்த்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன்னதாக அண்ணாதுரை உயிரிழந்துவிட்டார். தம்பதிக்கு சத்தியமூர்த்தி என்ற 26 வயது மகனும், தமிழ்செல்வி என்ற மகளும் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா போதை அட்டகாசம்.. புகார் அளித்ததால் இளைஞர் குத்திக்கொலை.. ராஜபாளையத்தில் கொடூரம்.!

பானிபூரி வியாபாரி:
தமிழ்செல்வி திருமணம் முடிந்து தர்மபுரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சத்தியமூர்த்தி சென்னையில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு வந்துசெல்லும் சத்தியமூர்த்திக்கு திருமணம் ஆகவில்லை. ஊருக்கு வரும்போதெல்லாம் தாயிடம் யாரையும் வீட்டுக்கு வரவழைக்கக்கூடாது, யாரிடமும் பேசக்கூடாது என கூறி வந்துள்ளார். இதனால் தாய் - மகன் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நடந்து வந்துள்ளது.
பிரச்சனை:
அதேபோல, சம்பவத்தன்று ஊருக்கு வந்த சத்தியமூர்த்தி - தாய் கஸ்தூரி இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது, ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி தாயை கட்டையால் அடித்து கீழே தள்ளி இருக்கிறார். இதில் தலையில் படுகாயமடைந்த கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்த அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமியை சீரழித்த சிறுவன்.. உடந்தையாக இருந்த பெற்றோர் கைது.!