நள்ளிரவில் மாணவியை டார்ச்சல் செய்த கணித ஆசிரியர்! ஆபாசமாக அனுப்பிய மெசேஜ்... தோழிகளிடம் அழுத மாணவி! பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி... பகீர் சம்பவம்..!!!



dharmapuri-teacher-arrested-pocso-case

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கணித ஆசிரியர் தங்கவேல் கைது செய்யப்பட்டுள்ளார். நள்ளிரவு நேரங்களில் மாணவியின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு நடவடிக்கை கோரினர்.

நள்ளிரவில் ஆபாச குறுஞ்செய்திகள்

பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக கணித ஆசிரியராக பணியாற்றி வந்த தங்கவேல், அங்கு படித்து வரும் மாணவி ஒருவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, நள்ளிரவு நேரங்களில் மாணவியின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 2025 ஆம் ஆண்டே காவல்துறைக்கு போன வீடியோ ஆதாரம்! வீரமணி வழக்கை மூடி மறைக்க முயன்ற திமுக... அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு..!!!

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, நடந்தவற்றை தனது தோழிகளிடம் தெரிவித்துள்ளார். பின்னர் விவரம் மற்ற ஆசிரியர்களுக்கும் தெரியவந்த நிலையில், தங்கவேலை அவர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தொல்லை தொடர்ந்ததாக கூறப்படுவதால், மாணவி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

மாணவியிடம் நடந்தவற்றை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்து பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

POCSO சட்டத்தில் ஆசிரியர் கைது

தகவலறிந்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி அளித்த புகார் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதையடுத்து, பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தங்கவேல் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், விசாரணையின்போது தங்கவேல் ஏற்கனவே வேறு சில பள்ளிகளில் மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்து, இடமாற்றம் செய்யப்பட்டு தற்போதைய பள்ளிக்கு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை தரப்பிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: பழகின உறவினரே செய்த துரோகம்! விளையாட சென்ற 8 வயது சிறுமியை... கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்று அத்து மீறல்..! பகீர் சம்பவம்...!!!