அதிர்ச்சி! ஏரிப் பகுதியில் சிக்கிய எலும்புக்கூடு..! செஞ்சி சிறுமியினுடையதா..? 33 நாட்களுக்கு பிறகு செஞ்சி சிறுமி வழக்கில் திடுக்கிடும் கண்டுபிடிப்பு..! பதற்றத்தில் பெற்றோர்...!!!
செஞ்சி பகுதியில் சிறுமி மாயமான வழக்கில், பரதன் தாங்கல் ஏரிக்கு அருகே முட்புதர்களுக்குள் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், காணாமல் போன சிறுமியின் நிலை என்ன ஆனது என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. மீட்கப்பட்ட எலும்புக்கூடு யாருடையது என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஏரிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு
செஞ்சி பகுதியில் சிறுமி மாயமான வழக்கை விசாரித்து வரும் போலீசார், சிறுவாடி காப்புக்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பரதன் தாங்கல் ஏரிக்கு அருகே உள்ள முட்புதர்களில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 7 வயது சிறுமி மாயமான வழக்கில்... சுற்றுவட்ட காட்டுப்பாதைகளை தெரிந்த ஆடு மேய்பவரிடம் 2 நாளாக விசாரணை..! சிபிசிஐடி வசம் சிக்கிய அரவிந்த்..!!!
தடயவியல் பரிசோதனைக்கு ஏற்பாடு
மீட்கப்பட்ட எலும்புக்கூடு யாருடையது என்பதை உறுதிப்படுத்த தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சிறுவாடி காப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
சிறுமி மாயமான வழக்கில் முக்கிய திருப்பமா?
ஏரிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு மாயமான சிறுமியுடையதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மருத்துவ மற்றும் தடயவியல் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகே அதன் அடையாளம் தெரியவரும். அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் சிறுமி மாயமான வழக்கில் அடுத்தகட்ட விசாரணை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.