2025 ஆம் ஆண்டே காவல்துறைக்கு போன வீடியோ ஆதாரம்! வீரமணி வழக்கை மூடி மறைக்க முயன்ற திமுக... அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு..!!!
ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், முந்தைய திமுக ஆட்சியின் நடவடிக்கைகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 2025-ம் ஆண்டு காவல்துறைக்கு வீடியோ ஆதாரம் சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், வழக்கு விசாரணையில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாகவும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
வீரமணி வழக்கில் விசாரணை தீவிரம்
சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமிகளை அடையாளம் காண்பது, வாக்குமூலங்களைப் பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளில் காவல்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க: பழகின உறவினரே செய்த துரோகம்! விளையாட சென்ற 8 வயது சிறுமியை... கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்று அத்து மீறல்..! பகீர் சம்பவம்...!!!
சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு
வழக்கு அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நான்கு பெண் காவல் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், முந்தைய கட்ட விசாரணையில் வழக்கு ஏன் தாமதமானது என்பது தொடர்பாக மூன்று காவல் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சி குறித்து அமைச்சர் கேள்வி
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், வீரமணி தொடர்பான புகார்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் குறித்து அப்போதைய ஆட்சிக்கு தகவல் சென்றதா என கேள்வி எழுப்பினார். ஆதாரங்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில், அப்போது ஏன் சிறப்புப் புலனாய்வு நடத்தப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் தேவை என அமைச்சர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், வீரமணி வழக்கை திமுக அரசு கைவிடவில்லை என்றும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கின் முந்தைய விசாரணை முதல் தற்போதைய நடவடிக்கைகள் வரை பல்வேறு அம்சங்கள் அரசியல் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளன.
இதையும் படிங்க: அந்த ஜோதிடர் போட்ட அடுத்த குண்டா? ஒரு போட்டோவை மாத்த ரூ.6.17 கோடியா? முதல்வர் விஜய்யின் புதிய உத்தரவால் கொத்தளிக்கும் தமிழகம்...!!!