தமிழகம்

தமிழக மக்களிடம் உங்களுக்கு தமிழ்நாட்டில் ஏது வீடு, ஏது நாடு என்று பேசிய வடமாநிலத்தவர்! பொங்கியெழுந்த தமிழர்கள்!

Summary:

Advice on the Nonviolent Way

கும்பகோணம் பெரிய தெருவில் கடை வைத்து நடத்திக்கொண்டு வருகிறார் வட மாநிலத்தை சேர்ந்தவர். இந்தநிலையில் இவரது கடைக்கு வரும் பெண்களிடமும் ,வாடிக்கையாளர்களிடமும் தமிழ்நாடு இனிமேல் எங்களது  இனிமேல் உங்களுக்கு தமிழ்நாட்டில் ஏது வீடு, ஏது நாடு என்று பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அப்பகுதி பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் கடை நடத்துபவரை கண்டிக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒன்றுகூடிய தமிழக மக்கள் அந்த நபரிடம் வன்முறையில் ஈடுபடாமல், அகிம்சை வழியில் ஈடுபட்டு, தமிழ்நாட்டில் வந்து தொழில் செய்யுங்கள் தவறில்லை ஆனால், தமிழக மக்களையும், தமிழ்நாட்டையும் தவறாக பேசாதீர்கள் என அறிவுரை கூறியுள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் அப்பகுயில் உள்ள மக்களை பாராட்டி வருகின்றனர். "இந்த நாகரிகம் தான் தமிழனை பெறுமை படவைக்கிறது. அகிம்சை வழியில் அறிவுரை சொல்லும் கெத்தே தனி தான்" எனவும் பாராட்டி வருகின்றனர்.


Advertisement