கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க நடிகர் விவேக் சொன்ன அருமையான யோசனை! அனைவரும் பின்பற்றுவோம்!

கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க நடிகர் விவேக் சொன்ன அருமையான யோசனை! அனைவரும் பின்பற்றுவோம்!



actor-vivek-talk-about-corona-virus

கொரோனோ வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, தமிழக மக்கள் கைகொடுக்காமல் கையெடுத்து கும்பிடும் பழக்கத்தை தொடர வேண்டும் என பொதுமக்களுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவில் துவங்கி இன்று உலகின் பல்வேறு நாடுகளில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, இதுவரை சுமார் 40 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர்.

actor

இந்தநிலையில், திருவாரூர் மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விவேக் ஊர்மக்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா வைரஸால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அது காற்றால் பரவக்கூடிய வைரஸ் அல்ல, ஒருவருக்கொருவர் கை கொடுப்பதன் மூலமாக பரவுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே தமிழக மக்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என கூறினார். மேலும், கொரோனா வைரஸ் தமிழகத்தில் வாழ வழியில்லை என்றும் இனிமேல் தமிழக மக்கள் ஒருவருக்கொருவர் கைகொடுப்பதை தவிர்த்துவிட்டு கையெடுத்து கும்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.